அஷ்வினி செல்வராஜ்
சிங்கப்பூரில் பலருக்கு 'ஸ்திரீட் கல்ச்சர்' எனப்படும் தெருசார்ந்த கலாசாரம் பெரிதும் பரிச்சயம் இல்லாத ஒன்றாகவே இருந்து வருகிறது. தெருசார்ந்த கலாசாரம் கலை களின் மீது கொண்டுள்ள தாக்கத் தைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண் டுள்ளது அலிவால் நகர்ப்புறக் கலைவிழா. சிங்கப்பூர் கலை வாரத்தின் ஓர் அங்கமாகத் நிகழும் இந்தக் கலை விழா நேற்று தொடங்கியது. இக்கலை விழாவினை ஒட்டி கம்போங் கிளாம் வட்டாரத்தைச் சுற்றி வரையப்பட்டிருக்கும் சுவர் ஓவியங்களைச் சுற்றிப்பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் பொதுமக்கள் சுவரோவியங்களைப் பற்றி அறிந்திராத பல தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம். தெருசார்ந்த கலை என்பது நகரமயமாக்குதலின் தாக்கத்தால் பரிணமித்த ஒரு கலை. அதுமட்டுமின்றி, கம்போங் கிளாம் வட்டாரத்தில் இந்தக் கலை வரலாற்று சிறப்பையும் பெற்றுள்ளது. முன்பு, களையிழந்து காணப்பட்ட இந்த வட்டாரம் சுவரோவியங்களின் வருகையினால் இப்போது புதுப்பொலிவுடன் திகழ்கிறது.