சிட்டி- எவர்ட்டன் மோதல்

லிவர்பூல்: இன்றிரவு நடைபெறும் இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டம் ஒன்றில் மான்செஸ்டர் சிட்டியும் எவர்ட்டனும் மோதுகின்றன. இந்த ஆட்டம் எவர்ட்டனின் குடிசன் பார்க் விளையாட்டரங் கத்தில் நடைபெறுகிறது. 42 புள்ளிகளுடன் லீக் பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கும் சிட்டி, இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று பட்டியலில் முன்னிலை வகிக்கும் செல்சியை நெருங்க இலக்கு கொண்டிருக்கிறது. அதே போல 30 புள்ளிகளுடன் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ள எவர்ட்டனும் வெற்றிக்குக் குறி வைத்துள்ளது.

இன்றைய ஆட்டம் சிட்டியின் நிர்வாகியான பெப் கார்டியோ லாவுக்கு மிகவும் முக்கியமானது. இதில் சிட்டி தோல்வியைத் தழுவினால் லீக் பட்டத்துக்கான வாய்ப்பை அது இழக்கக்கூடும். அதுமட்டுமல்லாது, இங்கிலிஷ் காற்பந்துப் போட்டிகளுக்கு கார்டி யோலா தகுதியற்றவர் என்று ஏற்கெனவே ஒரு சில தரப் பினரிடமிருந்து எழுந்துள்ள அதிருப்திக் குரல்கள் மேலும் விரிவடைந்து வலுவடையக்கூடும். கடந்த மூன்று சந்திப்புகளில் இவ்விரு குழுக்களும் இரண்டு முறை சமநிலை கண்டன. ஓர் ஆட்டத்தில் சிட்டி 3=1 எனும் கோல் கணக்கில் எவர்ட்டனைத் தோற்கடித்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!