லயன்ஸ் வீரர் ஷகிர் ஹம்சா கைது

சிங்கப்பூர் தேசிய காற்பந்துக் குழுவின் தற்காப்பு ஆட்டக்காரரான ஷகிர் ஹம்சா கைது செய்யப்பட்டுள்ளார். எஸ் லீக் போட்டியில் போட்டியிடும் தெம்பனிஸ் ரோவர்ஸ் குழுவுக்காவும் விளையாடி வரும் ஷகிர், குடும்ப விவகாரம் தொடர்பான வழக்கு சம்பந்தமாகக் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தி நியூ பேப்பர் தெரிவித்தது. ஆனால் அவர் என்ன குற்றம் புரிந்தார் என்பது குறித்து இன்னும் தெரியவில்லை. ஆசியான் காற்பந்துக் கூட்டமைப்பு சாம்பின்ஸ் லீக் தகுதிச் சுற்றில் பிலிப்பீன்சின் கிளோபல் எஃப்சி குழுவை தெம்பனிஸ் ரோவர்ஸ் சந்திக்க இன்னும் சில தினங்களே உள்ளன.

இந்நிலையில், ஷகிர் கைது செய்யப்பட்டிருப்பது அக்குழுவுக்கு அதிர்ச்சியையும் பின்னடைவையும் ஏற்படுத்தி உள்ளது. புதிய பருவத்தில் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பு பயிற்சி நிமித்தம் நட்புமுறை ஆட்டங்களில் களமிறங்க தெம்பனிஸ் குழு வீரர்கள் மலேசியாவின் திரங்கானு மாநிலத்துக்குச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்படி தெம்பனிஷ் குழுவினர் நேற்று முன்தினம் சாங்கி விமான நிலையத்துக்குச் சென்றனர். பயணத்துக்காக தமது சக ஆட்டக்காரர்களுடன் அங்கு சென்றடைந்த ஷகிரை போலிசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஷகிர் ஹம்சா. ஸ்ட்ரெட்ய்ஸ் டைம்ஸ் கோப்புப்படம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!