தற்காப்பு உறவை வலுப்படுத்த ஜப்பான்-ஆஸ்திரேலியா இணக்கம்

சிட்னி: ஜப்பானும் ஆஸ்திரேலியாவும் கூட்டு ராணுவப் பயிற்சி மூலம் தற்காப்பு உறவை வலுப் படுத்த அவ்விரு நாடுகளின் தலைவர்கள் இணக்கம் கண் டுள்ளனர். ஆஸ்திரேலியா வந்துள்ள ஜப்பானியப் பிரதமர் ‌ஷின்சோ அபே சிட்னியில் நேற்று ஆஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்புல்லை சந்தித்துப் பேசினார். டர்ன்புல் 2015ஆம் ஆண்டு பற்பகுதியில் பிரதமர் ஆன பிறகு திரு அபே முதன் முறையாக ஆஸ்திரேலியா வந்துள்ளார்.

இரு தலைவர்களும் பல்வேறு அம்சங்கள் குறித்து பேச்சு நடத்திய பிறகு செய்தியாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர். சட்ட விதிமுறை, தடையற்ற வர்த்தகம், இந்த வட்டாரத்தில் சந்தையைத் திறந்து விடுதல் ஆகியவற்றில் ஒத்துழைக்க இரு நாடுகளும் கடப்பாடு கொண்டுள்ளதாக திரு டர்ன்புல் செய்தி யாளர் கூட்டத்தில் கூறினார். இரு நாடுகளும் சேர்ந்து மேற்கொள்ளும் பயிற்சிகளில் ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்க வகை செய்யும் உடன்பாட்டில் இரு தலைவர்களும் நேற்று கையெழுத்திட்டனர்.

செய்தியாளர் கூட்டத்தில் ஆஸ்திரேலியப் பிரதமருடன் ஜப்பானியப் பிரதமர் ‌ஷின்சோ அபே. படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!