$2.5 மி. உபகாரச் சம்பளம்

அடுத்த மூன்றாண்டுகளுக்கு S$2.5 மில்லியன் பெறுமானமுள்ள கல்வி உபகாரச் சம்பளங்கள் வழங்க ஏதுவாக யுரே‌ஷியர் சங்கம், மெண்டாக்கி, சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் சங்கம் ஆகிய அமைப்புகளுடன் பிஎஸ்பி பயிலகம் புரிந்துணர்வுக் குறிப்பில் கையெழுத்திட்டுள்ளது. இதன்படி, அடுத்த மூன்றாண்டு களுக்கு இந்த அமைப்புகளைச் சேர்ந்த 200க்கும் அதிகமானோர் பிஎஸ்பி பயிலகத்தில் கல்வி கற்கும் வாய்ப்பைப் பெறுவர். இவர் கள் அனைவரும் பிஎஸ்பி வழங் கும் பட்டய, பட்டப் படிப்பு பாடத் திட்டங்களை எடுத்து படிக்கலாம்.

பிஎஸ்பி பயிலகத்தின் 'எக்செ சபல் இனி‌ஷியேட்டிவ்' என்னும் திட்டத்தின் அங்கமாக இவர் களுக்கு கல்வி உபகாரச் சம்பளங் களை வழங்க பயிலகம் உறுதி அளித்துள்ளது. பிஎஸ்பி பயிலகத்தின் கல்வி உதவித் திட்டத்தின்படி, அடுத்த மூன்றாண்டுகளுக்கு அந்தப் பயிலகத்தில் பட்டயக் கல்வியை பகுதி நேரமாகவோ, முழு நேர மாகவோ ஒவ்வோர் ஆண்டும் பயிலும் 20 மாணவர்களின் கல்விக் கட்டணத்தை முழுவது மாக பயிலகம் ஏற்கும். அத்துடன், அடுத்த மூன்றாண்டுகளுக்கு பயிலகத்தின் பங்காளித்துவ பல் கலைக்கழகங்களான கவண்ட்ரி, எடின்பர்க் நேப்பியர் ஆகிய இரு பல்கலைக்கழகங்களில் ஒவ்வோர் ஆண்டும் பட்டப் படிப்பு பயிலும் ஒரு மாணவரின் முழு கல்விக் கட்டணத்தை பிஎஸ்பி பயிலகம் ஏற்கும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!