தமிழ் உணர்வு பொங்கும் தைத்திருநாள்

ஐம்பது, அறுபது, எழுபதுகளின் தொடக்கம் வரையில் சிங்கப்பூரில் பொங்கலை முன்னிட்டு 'தமிழர் திருநாள்', 'பொங்கல் விழா' என பெரிய அளவில் தைத்திருநாள் கொண்டாடப்பட்டது. பொங்கல், தமிழர் திருநாளை முன்னிட்டு பெரிய அளவிலான சமூக நிகழ்ச்சிகள் இடம்பெற்றதை நினைவுகூர்ந்த 74 வயது திரு அப்பாய் கிருஷ்ணசாமி, 1950களில் புக்கிட் பாஞ்சாங் பகுதியின் பொங்கல் கொண்டாட்டங்களைப் பற்றி விவரித்தார். "கடந்த 1959ல் குறிப்பிட்ட அரசாங்க அமைப்பின் ஊழியர்கள் புக்கிட் பாஞ்சாங் பகுதியில் பொங் கலைச் சிறப்பாகக் கொண்டாடு வார்கள். புக்கிட் பாஞ்சாங் உயர் நிலைப் பள்ளி மாணவராக அந்த அமைப்பு ஏற்பாடு செய்த பேச்சு, பாட்டு, நாடகப் போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறேன்," என்றார் அவர்.

பிறகு ஏதோ ஒரு காரணத் திற்காக கொண்டாட்டங்கள் சில ஆண்டுகள் தொடராத நிலையில் துடிப்புமிக்க இளையரான திரு கிருஷ்ணசாமி, சக நண்பர்களுடன் இணைந்து 'இந்தியர் இளைஞர் கலாசார, சமூக நல மன்றம்' எனும் குழுவாக இயங்கி 1963ல் வீடு வீடாக நிதி திரட்டினார். "அந்த நிதியைக்கொண்டு பொங்கல் நேரத்தில் ஆண்டு தோறும் பேச்சு, பாட்டு, நாடகப் போட்டிகளை புக்கிட் பாஞ்சாங் சமூக நிலையத்திலும் சடுகுடு, திடல்தட, காற்பந்து போன்ற விளையாட்டுகளை புக்கிட் பாஞ் சாங் தொடக்கப்பள்ளித் திடலில் நடத்தினோம்," என்றார் முன்னாள் தமிழ் ஆசிரியர் கிருஷ்ணசாமி. தற்போதைய உட்லண்ட்ஸ் ரோட்டுப் பகுதியில் அன்று பத்தரை மைல் என்று அழைக்கப் பட்ட கம்பத்துப் பகுதியில் வளர்ந்த திரு கிருஷ்ணசாமியுடன் அந்த மன்றத்தில் சேவையாற்றியவர் களில் ஒருவர் 72 வயது திரு மாசாப்சாமி முருகன்.

அப்பகுதியில் 1960களில் தகர கூரை வீடுகளில் வசித்த திரு மாசாப்சாமி அங்கு வசித்த பெரும் பாலான இந்தியர்கள் பிரிட்டிஷ் அரசு கடற்படை அல்லது அரசாங்கத் துறைகளில் பணி யாற்றியதாகத் தெரிவித்தார். "வீட்டில் சர்க்கரைப் பொங்கல் பொங்கி, சீன, மலாய்க்கார அண்டை வீட்டாருக்கும் கொடுப் போம். ஆடு, மாடு கொட்டகைகளும் சில வீடுகளில் இருந்ததால், மாட்டுப் பொங்கல் மிக விமரி சையாகக் கொண்டாடப்பட்டது," என்று அவர் குறிப்பிட்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!