கிட்டத்தட்ட பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிக பட்சம் 10 மண் பானைகளை விற்ற ஜோதி புஷ்பக்கடை இப்போது பொங்கலுக்காக ஏறத்தாழ 800 மண் பானைகளை விற்கிறது. அந்த அளவுக்கு பொங்கல் பண்டிகை சிங்கப்பூரில் கடந்த பல ஆண்டுகளாகப் பிரபலம் அடைந்து வந்துள்ளது. சிங்கப்பூரில் தொன்றுதொட்டு தமிழர்கள் பொங்கல் பண்டிகை யைக் கொண்டாடி வருகின்றனர். பொங்கல் என்பது தமிழர் திருநாள் என்பதாலும் அது உழவர் திருநாள் என்பதாலும் நமக்கு உணவு அளிக்கப் பாடுபடும் உழவர்களுக்கு நன்றிகூறும் வகை யில் பல சிங்கப்பூரர்கள் இங்கு பொங்கலைக் கொண்டாடு கிறார்கள்.
சிங்கப்பூர் விவசாயம் இல்லாத நாடு. எனினும் இந்த நாட்டில் குடியேறிய தமிழர்கள் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடத் தவறியதில்லை. அதன் பிறகு நாகரிக, நவீன சிங்கப்பூர் உருவெடுத்தபோது மக்கள் அடுக்குமாடிக் கட்டடங் களுக்குள் அடைபட்டபோதும்கூட குடும்பங்கள் அவரவர் வீடுகளில் சிறிய அளவில் பொங்கலைக் கொண்டாடி வந்தனர். காலப் போக்கில் கரும்பு, மண் பானை, மஞ்சள் கொத்து ஆகியவற்றை எளிதில் பெற முடியாமல் போனது. அந்த நேரத்தில் பொங்கல் பண்டிகையை அனைத்து சிங்கப்பூர் தமிழர்களும் கொண் டாட வேண்டும் என்பதற்காகக் கடந்த 2001ஆம் ஆண்டு முதல் பொங்கலை முன்னிட்டு கேம்பல் லேன் மூடப்பட்டு பெரும் பொங்கல் சந்தை தொடங்கப்பட்டது என்றார் லிஷா எனும் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மரபுடைமைச் சங்கத் தலைவரும் ஜோதி புஷ்பக் கடை உரிமையாளருமான திரு ராஜ்குமார் சந்திரா, 58.
கடந்த 2002ல் லிட்டில் இந்தியாவில் இடம்பெற்ற கூட்டுப் பொங்கல். கோப்புப் படம்