தஞ்சாவூர்: தஞ்சையில் தஞ்சை தமிழ்ச் சங்கம், மருதப்பா அறக்கட்டளைச் சார்பில் நடைபெற்ற தமிழர் கலை இலக்கிய பொங்கல் விழாவில் பேசிய திவாகரன், ஜெயலலிதாவிடமிருந்து எங்களைப் பிரிக்க சதி நடந்தது, ஆனால் அந்தத் திட்டம் பலிக்கவில்லை என்று கூறியிருக்கிறார். தமிழரசி திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. புதிய பார்வை ஆசிரியர் ம. நடராஜன் முன்னிலையில் மன்னார்குடி செங்கமலத் தாயார் அறக்கட்டளை நிறுவனர் திவாகரன் குத்து விளக்கு ஏற்றி விழாவைத் தொடங்கி வைத்துப் பேசினார். "சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதாவை விட்டு எங்களை நகர்த்த சதி நடந்தது.
அப்படி முழுவதும் நகர்த்திவிட்டால் எளிதாக ஜெயலலிதாவை ஒன்று மில்லாமல் செய்துவிடலாம் என்று சிலர் திட்டம் போட்டனர். அந்தத் திட்டமும் நடக்கவில்லை. எம்ஜிஆர் மறைவுக்குப் பின்பு ஜெயலலிதாவை கொண்டு வந்தது புதிய பார்வை ஆசிரியர் நடராஜன்தான். ஜெயலலிதா, ஜானகி ஆகிய இரண்டு கட்சிகளையும் இணைத்து முடங்கிப்போன இரட்டை இலைச்சின்னத்தை மீட்டவரும் நடராஜன்தான். திண்டுக்கல்லில் தேர்தல் நடந்தபோது அந்தத்தேர்தலில் எம்ஜிஆருக்கு ஆதரவாக தஞ்சையில் இருந்தும் மன்னார்குடியில் இருந்தும் பாடுபட்டோம். அப்போது மதுரை முத்து எங்களை அடித்தார். இந்த உயிரையும் துச்சமென மதித்து அதிமுகவை 100 ஆண்டுகள் கொண்ட கட்சியாக உருவாக்குவோம். எங்கள் உயிருக்கு அச்சுறுத்தல்கள் வருகின்றன. நாங்கள் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் இல்லை. இப்போ
தஞ்சை விழாவில் ஜெயலலிதா உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. படம்: ஊடகம்