ஆஸி. மண்ணில் பாகிஸ்தான் அபார வெற்றி

மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி ஆறு விக்கெட்டுகள் வித்தி யாசத்தில் அபார வெற்றி பெற் றுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று பிரிஸ்பன் நகரில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 92 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வாகை சூடி தொடரை 1=0 என்று முன்னிலை வகித்தது. இதற்குப் பழி தீர்க்கும் வகையில் பாகிஸ்தான் வீரர்கள் நேற்று மிகுந்த முனைப்புடன் விளையாடி தொடரை 1=1 என்று சமன் செய்தது. நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பந்தடித்தது.

பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் அதிரடியாக விளையாடி ஆஸ்திரேலியாவின் விக்கெட்டு களை மளமளவெனச் சாய்த்தனர். ஆஸ்திரேலியா அதிக ஓட்டங் கள் எடுக்காதபடி பாகிஸ்தான் அணி பார்த்துக்கொண்டது. ஆஸ்திரேலியா 48.2 ஓவர்களில் 220 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து, பந்தடித்த பாகிஸ்தான் அணி, 47.4 ஓவர் களில் நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 221 ஓட்டங்களை எடுத்து வாகை சூடியது. ஆட்ட நாயகனாக 72 ஓட்டங்களைக் குவித்த பாகிஸ் தான் அணியின் முகம்மது ஹஃபீஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர் அனுப்பிய பந்தைப் பறக்கவிடும் பாகிஸ்தானின் பந்தடிப்பாளர் ஷோயிப் மாலிக். பந்தை எட்டுத் திக்கும் பறக்கவிட்ட பாகிஸ்தான் வீரர்களைத் தடுக்க முடியாமல் நேற்று மெல்பர்னில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் திக்குமுக்காடினர். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!