லெஸ்டரை வீழ்த்திய செல்சி

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியின் நடப்பு வெற்றியாளரான லெஸ்டர் சிட்டி யை செல்சி தோற்கடித்துள்ளது. நேற்று அதிகாலை நடைபெற்ற இந்த லீக் ஆட்டத்தில் 3=0 எனும் கோல் கணக்கில் செல்சி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்துக்கு முன்பு செல்சியின் நட்சத்திர வீரர் டியேகோ கோஸ்டாவுக்கும் அக் குழுவின் பயிற்றுவிப்பாளர் களுக்கும் இடையே அவரது உடலுறுதி குறித்து கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப் படுகிறது. இதன் விளைவாக லெஸ்டர் சிட்டிக்கு எதிரான ஆட்டத்தில் கோஸ்டா களமிறங்கவில்லை என்று நம்பப்படுகிறது. அவருக்குப் பதிலாக மார்கோஸ் அலோன்சோ விளையாடினார். இந்த மாற்றம் செல்சிக்கு ஒரு வரப்பிரசாதமாகவே அமைந்தது. லெஸ்டருக்கு எதிராக இரண்டு கோல்களைப் போட்டு செல்சியின் வெற்றிக்கு அலோன்சோ முக்கிய காரணமாக இருந்தார். சொந்த மண்ணில் விளையாடிய லெஸ்டர் ஆட்டத்தின் தொடக் கத்தில் தாக்குதல்களில் இறங் கியது. செல்சியின் கோல்காப்பாளர் விழிப்புடன் இருந்ததால் லெஸ் டரின் கோல் முயற்சிகள் முறியடிக் கப்பட்டன.

செல்சிக்காக தமது இரண்டாவது கோலைப் போட்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கும் மார்கோஸ் அலோன்சோவுடன் (இடது) சேர்ந்து கொண்டாடும் சக வீரர் கேரி கெஹில். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!