லிட்டில் இந்தியாவில் இவ்வாண்டு பொங்கல் கொண்டாட்டத்தின் தொடர்பில் பற்பல நிகழ்ச்சிக ளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தன. இம்மாதம் 7ஆம் தேதி பொங் கல் ஒளியூட்டைப் பிரதமர் அலுவ லக அமைச்சர் சான் சுன் சிங் தொடங்கி வைத்ததிலிருந்து லிட் டில் இந்தியா வட்டாரமே பொங்கல் குதூகலத்தில் திளைத்திருந்தது. பொங்கல் ஒளியூட்டு அடுத்த மாதம் 12ஆம் தேதி வரை நீடிக்கும். கேம்பல் லேனில் அமைந்து இருந்த பொங்கல் விழா கிராமத்தில் பொங்கல் பண் டிகைக்குத் தேவையான அனைத் துப் பொருட்களும் விற்கப்பட்டன.
மக்கள் லிட்டில் இந்தியாவுக்கு அலைஅலையாய் வந்து தங்க ளுக்கு வேண்டிய பொருட்களை வாங்கிச் சென்றனர். நேற்று முன்தினம் பொங்கல் நாளன்று மாலையில் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சூரிய பொங்கல் நிகழ்ச்சி இடம் பெற்றது. பெரிய மண்பானையில் பொங்கல் வைத்து, அனைவ ருடனும் ஒன்றுகூடி சூரியப் பொங்கல் விழா கொண்டாட்டப் பட்டது. தஞ்சோங் பகார் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு மெல்வின் யோங் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார்.
லிட்டில் இந்தியாவில் உள்ள கேம்பல் லேனில் நடத்தப்பட்ட கூட்டுப் பொங்கலில் இந்தியர்களுடன் சேர்ந்து பிற இனத்தவர்களும் சுற்றுப்பயணிகளும் கலந்துகொண்டனர். இந்தப் பொங்கல் வைக்கும் போட்டியில் 30 குழுக்கள் பங்கெடுத்தன. படம்: லிஷா