பொங்கோல் நகர சதுக்கம் திறப்பு

பொங்கோல் குடியிருப்பாளர்கள் அதிக சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு வசதியாக புதிய பொங்கோல் நகர சதுக்கம் நேற்று திறக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஆயிரம் பேர் நடமாடும் இடவசதி கொண்ட இச்சதுக்கம் வாட்டர்வே பாய்ண்ட் கடைத்தொகுதி அருகே அமைந்துள்ளது. போக்குவரத்து வசதிகளும் அருகே அமைந்துள்ளன. உடற்பயற்சி, உணவு மற்றும் இசை தொடர்பான நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு சமூக நிகழ்வுகள் மூலம் குடியிருப்பாளர்கள் இச்சதுக்கத்தில் ஒன்றிணையலாம்.

திறப்பு விழாவில் பங்கேற்ற துணைப்பிரதமர் டியோ சீ ஹியன், பொங்கோல் கடந்த பத்தாண்டுகளில் நல்ல மாற்றம் கண்டுள்ளது என்றும் 26,000க்கு மேற்பட்ட வீடமைப்பு வளர்ச்சிக்கழக வீடு களும் 5,800 தனியார் வீடுகளும் பொங்கோல் நகரில் புதிதாக சேர்க்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். இப் பகுதிக்கான முதல் வீடமைப்புத்திட்டம் கடந்த 2000ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டது. "இந்த நகர சதுக்கம் பொங் கோல் குடியிருப்பாளர்களை ஒன்றிணைக்கும் ஆக அண்மைய முயற்சிகளில் ஒன்று," என்றார் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு டியோ.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!