பொங்கல் கொண்டாட்டத்தில் ஆர்வம் காட்டும் இளையர்கள்

யாஸ்மின் பேகம்

நீண்ட கால நண்பர்களாகிய வைத்தீஸ்வரி, சங்கரி, 22, ஆகிய இருவரும் முதல் முறையாக கரும்பு, மஞ்சள்கொத்து, இஞ்சிக் கொத்து பூ போன்ற பொங்கல் கொண்டாடத் தேவையான பொருட்களை வாங்க ஒரு பெரிய பட்டியலோடு லிட்டில் இந்தியாவில் கடந்த வெள்ளிக்கிழமை வலம் வந்தனர். சிம் பல்கலைக்கழகத்தில் உளவியல் துறையில் பயிலும் இருவரும் பெற்றோர் துணை யில்லாமல் லிட்டில் இந்தியா சந் தைக்குச் சென்றிருந்தனர். தாயார் எழுதிக்கொடுத்த பட்டியலில் இருந்த பொருட்களைத் தேடித் தேடி வாங்கிய இருவரும் சந்தேகம் எழுந்தபோதெல்லாம் அவர்களது அம்மாவிடம் தொலைபேசி வழியாகப் பேசித் தெளிவு படுத்திக்கொண்டனர். தாங்கள் இந்த ஆண்டும் தவறாமல் பொங்கல் வைத்து, புதிய ஆடை அணிந்து இந்தத் தமிழ்ப் பண்டிகையைக் குடும்பத் தாருடன் ஒன்றிணைந்து சிறப் பாகக் கொண்டாட இருப்பதாகக் கூறினார்கள்.

வேறு சில இளையர்களும் தங்கள் பெற்றோர்களுடன் பொங்கல் பண்டிகைக்குத் தேவை யான பொருட்கள் வாங்கியதை லிட்டில் இந்தியா சந்தையில் காண முடிந்தது. நெல் போன்ற தானியங் களையும் காய், கனிகளையும் விளைவித்து அறுவடை செய்து கொடுக்கும் விவசாயிகளுக்கு நன்றி கூறுவதற்காக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது என்று கூறினார் 'சிம்' பல்கலைக் கழகத்தில் வர்த்தகம் பயிலும் பிரியா ராஜேந்திரன், 22.

பொங்கலுக்குப் பொருட்கள் வாங்க லிட்டில் இந்தியாவுக்கு வந்திருந்த சங்கரி ராகேந்திரன் (இடது), வைத்தீஸ்வரி சந்திர சேகரன். படம்: திமத்தி டேவிட்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!