ஆர்சனல்- சட்டன் மோதல் லண்டன்: இங்கிலிஷ் எஃப்ஏ

கிண்ணக் காற்பந்துப் போட்டி யின் ஐந்தாவது சுற்று ஆட்டத் தில் 12 முறை கிண்ணம் ஏந்தி உள்ள ஆர்சனலை லீக் போட்டி களில் இடம்பெறாத சட்டன் குழு எதிர்கொள்கிறது. நான்காவது சுற்று ஆட்டத்தில் லீட்ஸ் யுனைடெட் குழுவைச் சந்தித்த சட்டன், 1-0 எனும் கோல் கணக்கில் வாகை சூடியது. ஆட்டத்தின் 53வது நிமிடத் தில் சட்டனுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. பெனால் டியை எடுத்த கோலின்ஸ் பந்தை வலைக்குள் சேர்த்தார். ஆட்டத்தை எப்படியும் சமன் செய்ய போராடிய லீட்ஸ் குழு வால் இறுதி வரை சட்டனுக்குப் பதிலடி கொடுக்க முடியாமல் போனது. ஐந்தாவது சுற்றுக்கான மற்றோர் ஆட்டத்தில் பர்ன்லி குழுவுடன் லிங்கன் சிட்டி மோதவிருக்கிறது.

சட்டனைப் போல லிங்கன் சிட்டியும் லீக் போட்டிகளில் இடம்பெறாத குழு என்பது குறிப்பிடத்தக்கது. 90 ஆண்டுகளுக்கும் முன்பு எஃப்ஏ கிண்ணத்தின் அமைப்பு மாற்றி அமைக்கப்பட்டதை அடுத்து, லீக் போட்டிகளில் இடம்பெறாத இரண்டு குழக்கள் ஐந்தாவது சுற்றுக்குத் தகுதி பெற்றிருப்பது இதுவே முதல்முறை. இதற்கிடையே, நடப்பு வெற்றி யாளரான மான்செஸ்டர் யுனை டெட் ஐந்தாவது சுற்று ஆட்டத் தில் பிளாக்பர்ன் குழுவுடன் மோதுகிறது. லீக் பட்டியலில் முன்னிலை வகித்து வரும் செல்சி ஐந்தாவது சுற்றில் இரண்டாவது நிலை லீக்கில் விளையாடும் உல்வர்ஹேம்டன் வன்டரர்ஸ் குழுவை எதிர் கொள்ளும். நான்காவது சுற்று ஆட்டத்தில் உல்வர்ஹேம்டன் வன்டரர்ஸ் குழு லிவர்பூலை தோற்கடித்து அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!