லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள 'மொட்ட சிவா கெட்ட சிவா' படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளனர். இப்படத்தை சாய் ரமணி என்பவர் இயக்கி யிருக்கிறார். லாரன்சுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.பி.சௌத்ரி தயாரித்திருக்கிறார். இப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளி யாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத் தில் லாரன்ஸ் காவல்துறை அதிகாரியாக நடித்து அசத்தியிருக்கிறார்.
அந்த முன்னோட்டத்தில் இடம்பெறும் சண்டைக் காட்சிகள் எல்லாம் கண்டிப்பாகப் படத்திற்குப் பலம் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் வகையில் வருகிற பிப்ரவரி 17ஆம் தேதி இப்படத்தை வெளி யிடப்போவதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். அதற்கு முன்னதாக பிப்ரவரி 5ஆம் தேதி இப்படத்தின் பாடல்களை வெளியிடப் போவதாகவும் அறிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். படம் ரசிகர்களை நிச்சயம் கவரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் லாரன்ஸ்.