ஜல்லிக்கட்டு: காவல்துறை வன்முறையை விசாரணை ஆணையம்

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதர வாக மாணவர்களும் இளையர்க ளும் தன்னெழுச்சியாக நடத்திய போராட்டத்தின் போது நிகழ்ந்த வன்முறை குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப் பட்டுள்ளது. அதன் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஜனவரி 23ஆம் தேதி சென்னை, மதுரை, கோவை உள் ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகக் கூடிய பல லட்சம் பேரை போலிசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி னர். அப்போது வன்முறை வெடித் தது. பல இடங்களில் பொதுமக்கள் மீது போலிசார் தடியடி நடத்தினர்.

வன்முறையாளர்களால் போலிசா ரும் தாக்கப்பட்டனர். வாகனங்களுக்குத் தீ வைக்கப் பட்டு, பொதுச் சொத்துகளும் சூறையாடப்பட்டன. இந்த வன்முறை தொடர்பாக காவல்துறை மீது பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டினர். மேலும் இது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இந்நிலையில் சட்டப்பேரவையில் அறிவித்ததற்கு ஏற்ப விசாரணை ஆணையம் அமைத்து, அதன் தலைவரையும் அறிவித்தது தமிழக அரசு. நீதிபதி ராஜேஸ்வரன் சென்னை மெரினா, கோவை, மதுரையில் நிகழ்ந்த வன்முறை, காவல்துறை அத்துமீறல் குறித்து விசாரணை நடத்துவார். மூன்று மாதங்களுக் குள் அவர் தனது அறிக்கையை அரசிடம் அளிக்க உள்ளார். இந்நிலையில், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கப்பட்டதற் காகப் பிரதமருக்கு தமிழக முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!