செல்சி- லிவர்பூல் சமநிலை

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டியலில் முன்னிலை வகிக்கும் செல்சிக்கு லிவர்பூல் வேகத் தடை போட்டுள்ளது. நேற்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் இவ்விரண்டு குழுக் களுக்கும் இடையிலான ஆட்டம் 1=1 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. ஆட்டத்தின் 25வது நிமிடத் தில் செல்சிக்கு ஃப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. லிவர்பூலின் தற்காப்புச் சுவரை அமைப்பதில் அதன் கோல்காப்பாளர் மின் யோலே கவனம் செலுத்திக் கொண்டிருந்தபோது சற்றும் எதிர்பாராத தருணத்தில் செல்சியின் டேவிட் லூயிஸ் பந்தை வலை நோக்கி அனுப்பினார். பந்து வலையைத் தொட, செல்சி கொண்டாடியது.

செல்சிக்குக் கிடைத்த ஃப்ரீ கிக் வாய்ப்பை எதிர்கொள்ள தாம் தயாராவதற்குள் பந்து வலை நோக்கி அனுப்பப்பட்டதைச் சுட்டி கோலை நிராகரிக்க லிவர் பூல் கோல்காப்பாளர் நடுவரிடம் முறையிட்டும் பயனில்லாமல் போனது. பாரிஸ் செயிண்ட் ஜெர்மேன் குழுவிலிருந்து விலகி லிவர் பூலில் இணைந்த பிறகு இதுவே டேவிட் லூயிஸ் தமது புதிய குழுவுக்காகப் போட்ட முதல் கோலாகும்.

பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி செல்சியின் டியேகோ கோஸ்டா (இடது) வலை நோக்கி அனுப்பும் பந்தைத் தடுத்து நிறுத்தும் லிவர்பூலின் கோல்காப்பாளர் மின்யோலே (நடுவில்). படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!