சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் உலகின் ஆக உயரிய நான்காவது பல்கலைக்கழகமாக பெயர் குறிப் பிடப்பட்டு இருக்கிறது. அந்தப் பல்கலைக்கழகம் தன் னுடைய பன்முக மாணவர்கள், ஆய்வாளர் வளத்துடன் பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளின் பிரபல பல்கலைக்கழகங்களைப் பின் தள்ளிவிட்டு அட்டவணையில் முன்னேறி இருக்கிறது. 'டைம்ஸ் உலக உயர்கல்வி பல்கலைக்கழகப் பட்டியல் அமைப்பு' சிங்கப்பூர் பல் கலைக்கழகத்தை நான்காவது இடத்தில் வரிசைப்படுத்தியுள்ளது. மொத்தம் 150 அனைத்துலக பல்கலைக்கழகங்களைக் கொண்ட பட்டியலில் ஆக்ஸ்போர்டு, கேம்பி ரிட்ஜ், ஹார்வர்ட் போன்ற பல் கலைக்கழகங்களை எல்லாம் தேசிய பல்கலைக்கழகம் முந்தி விட்டது.
இருந்தாலும் ஆசியாவின் ஹாங்காங் பல்கலைக்கழகம் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு வந்துவிட்டது. சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த இடிஎச் சூரிச், இகோல் பலதுறைக் கல்விப் பல் கலைக்கழகம் ஆகியவை முதல் இரண்டு இடங்களை வகிக் கின்றன.