ஒவ்வாமையை அகற்றும் மருத்துவமனை திட்டம் விரிவாக்கம்

சிறுவர்களிடம் ஏற்படக்கூடிய ஒவ்வாமையை அகற்றும் ஒரு செயல்திட்டத்தை தேசிய பல் கலைக்கழக மருத்துவமனை அமல்படுத்தி வருகிறது. சிறார்கள் சிலருக்கு நிலக் கடலை ஒத்துக்கொள்ளாது. ஒரு கடலையைச் சாப்பிட்டால்கூட அவர்களின் உதடுகள் வீங்கி விடும். உடல் முழுவதும் சிவந்து விடும். மூக்கு ஒழுகத் தொடங்கி விடும். இத்தகைய பிரச்சினையை அத்தகைய சிறார்கள் சமாளித்து நிலக்கடலை அவர்களின் உடலில் ஒவ்வாமையை ஏற்படுத்தாமல் செய்வதற்கு உதவும் வகையில் இந்தப் பல்கலைக்கழகம் கடந்த இரண்டு ஆண்டு காலமாக ஒரு செயல்திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. இப்போது இந்தப் பல்கலைக் கழகம் அந்தச் செயல்திட்டத்தை விரிவுப்படுத்துகிறது. பசும்பால், முட்டை, முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு முதலானவை சில சிறார் களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி விடும். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண மருத்துவமனை இப்போது உதவிக்கரம் நீட்டுகிறது.

தேசிய பல்கலைக் கழக மருத்துவ மனையில் உதவி தாதி மிச்சல் டான், இங் ‌ஷி காய் என்ற 13 வயது பையனுக்கு நிலக்கடலை ஒவ்வாமை சிகிச்சை அளிக்கிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!