பீஷான் டிபிஎஸ்எஸ் வீடு $1.18மி. விலைக்கு கைமாறியது

பீஷானில் டிபிஎஸ்எஸ் அடுக்குமாடி வீடு $1.18 மில்லியன் சாதனை விலையில் விற்கப்பட்டிருக்கிறது. வடிவமைத்து, கட்டி, விற்கும் (டிபிஎஸ்எஸ்) திட்டத்தின் கீழ் இந்த வீடு கட்டப்பட்டது. அரசாங்க அடுக்குமாடி வீடு ஒன்று இந்த விலைக்கு விற்பனையாகி இருப்பது இதுவே முதல்முறை என்று தெரிகிறது. கைமாறிய ஐந்தறை வீடு நதுரா லோஃப்ட் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 480 வீடுகளைக் கொண்ட மூன்று புளோக்குகளில் அமைந்துள்ள 12 உச்சிமாடி வீடுகளில் ஒன்றாகும். வீடு விற்பனையில் விற்பனையாளரைப் பிரதிநிதித்த சிங்கப்பூர் ரியல்டர் இன்க் நிறுவனத்தின் முகவர் ஜோய் சான், பரவலான பார்வைத் தோற்றம், மத்திய அமைவிடம், விசாலமான இடப்பரப்பளவு ஆகியவை காரணமாக இந்த வீடு அந்த விலைக்கு விலைபோய் இருக்கிறது என்று கூறினார். மொத்தம் 120 சதுரமீட்டர் பரப்பளவைக் கொண்ட இந்த பீஷான் வீடு வழக்கமாக 11-0 சதுரஅடி பரப்பளவைக் கொண்ட வீவக ஐந்தறை வீட்டைவிட பெரியதாகும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!