முன்னாள் அமைச்சருக்கு ஏழாண்டு சிறை

ராஞ்சி: நாட்டிலேயே முதன்முறையாக சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் அமைச்சர் ஹரி நாராயண் ராய் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப் பட்டு உள்ளது. ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா வின் அமைச்சரவையில் சுற்றுலாத் துறை அமைச்சராக இடம்பெற்றிருந்தவர் ஹரி நாராயண் ராய். சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்று பின்பு அரசுக்கு ஆதரவு தெரிவித்ததால் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இவர் மீது 3.72 கோடி ரூபாயைச் சட்ட விரோத பணப் பரிமாற்றம் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. ராஞ்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றம் வழக்கை விசாரித்தது. முன்னாள் அமைச்சர் ஹரி நாராயண் ராய் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு உள்ள தாகவும் அவருக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை யும் ஐந்து லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவதாக வும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி.கே.திவாரி தீர்ப்பு கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!