மோடியின் விமானப் பயணக் கட்டணம் ரூ.119 கோடி

புதுடெல்லி: பிரதமர் மோடி மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களுக்கான விமானக் கட்டண நிலுவைத் தொகை ரூ.119.70 கோடியை ஏர் இந்தியா நிறுவனத்துக்குப் பிரதமர் அலுவலகம் செலுத்தி உள்ளது. இது பிரதமர் அலுவலக வலைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 14வது பிரதமராக 2014ஆம் ஆண்டு மே 26ஆம் தேதி மோடி பொறுப்பேற்றது முதல் அடிக் கடி வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். மோடியின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி லோகேஷ்பத்ரா விவரங்களைக் கேட்டு இருந்தார். இதற்கு பிரதமர் அலுவலகம் பதிலளித்து இருந்தது. அதில் மோடி இதுவரை 27 வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டதாகவும் 8 பயணத்துக்காக ஏர் இந்தியா நிறுவனத்துக்குக் கட்டண தொகையாக ரூ.119.70 கோடி செலுத்த வேண்டி உள்ளதாக வும் தெரிவித்து இருந்தது. இதையடுத்து ஏர் இந்தியாவுக்கு நிலுவைத் தொகையை உடனே செலுத்தக் கோரி அவர் தலைமை தகவல் ஆணையத்தில் முறையீடு செய்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!