விமானத்தில் பயணம் செய்த இளவரசரின் 80 பருந்துகள்

துபாய்: சவூதி இளவரசரின் 80 பருந்துகள் விமானத்தில் தனித் தனியாக இருக்கையில் அமர்ந்து பயணம் செய்யும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக் கிறது. விமானத்தில் பெரும்பாலான இருக்கைகளை பருந்துகள் ஆக் கிரமித்திருந்த காட்சியை விமானி ஒருவர் படம் பிடித் திருந்தார். ஒவ்வொரு இருக்கையிலும் ஒரு பறவை கட்டி வைக்கப் பட்டிருந்தது. என்னுடைய நண்பரான விமானி, இந்தக் காணொளியை எனக்கு அனுப்பியிருந்தார் என்று ரெட்டிட் வலைப்பதிவாளர் சொன்னார். சவூதி இளவரசர் தமது 80 பறவைகளுக்காக விமான டிக் கெட்டுகளை வாங்கியிருந்தார் என்று கலிஜ் டைம்ஸ் நாளேடு குறிப்பிட்டது. விமானத்தில் பறவைகள் பயணம் செய்வது வழக்கத்திற்கு மாறானது. இருந்தாலும் எத்தியாட் ஏர் வேஸ், எமிரேட்ஸ், கட்டார் ஏர் வேஸ், ராயல் ஜோர்டானியன் ஏர் வேஸ் உட்பட வளைகுடா நாடு களுக்குச் சேவையாற்றும் பல விமான நிறுவனங்கள் பறவை களை பயணிகள் கொண்டு செல்ல அனுமதிக்கின்றன.

விமானத்தில் சொகுசாகப் பயணம் செய்த பருந்துகள். படம்: இணையம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!