தேர்தலில் பான் கி மூன் போட்டியிடவில்லை

சோல்: அதிபர் தேர்தலில் போட்டி யிடும் முயற்சியை முன்னைய ஐநா தலைமைச் செயலாளர் பான் கி மூன் கைவிட்டுள்ளார். நியூயார்க்கில் பத்து ஆண்டு களுக்கு மேல் வாழ்க்கையைக் கழித்த திரு பான் கடந்த மாதம் தாய் நாடான தென் கொரியாவுக் குத் திரும்பினார். இவ்வாண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் அவர் போட்டி யிடுவார் என்று பெரிதும் எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் அவர் பலதரப்பட்ட இடையூறுகளை எதிர்நோக்கியதாகக் கூறப்படு கிறது. நாட்டை ஒருங்கிணைக்கும் முயற்சியையும் அரசியலில் மாற்றத்தைக் கொண்டுவரும் விருப்பத்தையும் கைவிட முடிவு செய்துள்ளதாகவும் செய்தியாளர் களிடம் திரு பான் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் பொது மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும் அவர் கூறினார். இருப்பினும் 72 வயது திரு பான் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அதி காரபூர்வமாக இதுவரை அறி விக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!