வெஸ்ட் ஹேமை மிரட்டிய சிட்டி

லண்டன்: சில வாரங்களுக்கு முன் எஃப்ஏ கிண்ணக் காற்பந்துப் போட்டியில் 5-0 என்ற கோல் கணக்கில் வெஸ்ட் ஹேம் யுனை டெட் குழுவைத் தோற்கடித்த மான்செஸ்டர் சிட்டி, மீண்டும் ஒரு முறை அக்குழுவைப் புரட்டி எடுத்தது. லண்டன் விளையாட்டரங்கில் நேற்று நடந்த இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் சிட்டி 4-0 என வெஸ்ட் ஹேமை வென்றது. முதன்முறையாக ஆட்ட நேரம் முழுவதும் களத்தில் இருந்தார் சிட்டியின் புதிய வரவான பிரேசில் ஆட்டக்காரர் கேப்ரியல் ஜீசஸ். ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் கெவின் டி புருனா கோலடிக்க உதவிய ஜீசஸ், பின்னர் 39வது நிமிடத்தில் தன் பங்குக்கும் ஒரு கோலைப் போட்டார்.

டாவிட் சில்வா (21'), யாயா டூரே (67') ஆகியோரும் சிட்டி சார்பில் ஆளுக்கொரு கோலை அடித்தனர். மற்றோர் ஆட்டத்தில் ஹல் சிட்டியும் மான்செஸ்டர் சிட்டியும் மோதின. கடந்த 23 நாட்களில் இவ்விரு குழுக்களும் மோதியது இது மூன்றாவது முறை.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!