ஸ்பெயினுக்குச் செல்லும் சிங்கப்பூர் காற்பந்து வீரர்

சிங்கப்பூர் காற்பந்து ஆட்டக்காரர் ஹாரிஸ் ஹருண், 26 (படம்), அடுத்த ஓராண்டுக்கு 'சிஇ லோஸ்பிட்டலெட்' எனும் மூன் றாம் நிலை ஸ்பெயின் காற்பந்துக் குழுவிற்காக விளையாட இருக் கிறார். இதன்மூலம் ஸ்பானியக் குழு ஒன்றிற்காக விளையாடும் முதல் சிங்கப்பூர் காற்பந்து ஆட்டக்காரர் எனும் பெருமையை ஹாரிஸ் பெறுகிறார். இவரை ஒப்பந்தம் செய்துள்ள ஜோகூர் டாருக் தக்சிம் குழு ஃபேஸ்புக் வாயிலாக இதனை அறிவித்துள்ளது. சிங்கப்பூர் தேசிய குழுவின் துணைத் தலைவரான ஹாரிஸ் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ஸ்பெயின் கிளம்ப இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"தனது ஆட்டத்திறனை மெரு கேற்றவும் அனுபவம் பெறுவதற் காகவும் ஓராண்டு காலத்திற்கு ஹாரிஸ் 'சிஇ லோஸ்பிட்டலெட்' குழுவிற்காக விளையாடுவார். சந்தேகமின்றி, இந்த நீண்டகாலத் திட்டம் எதிர்காலத்தில் நல்ல பலனை அளிக்கும்," என்று அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது. ஜோகூர் டாருல் தக்சிம் குழுவின் தலைவரான சுல்தான் இப்ராகிம், ஹாரிசுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!