இயக்குநர் விஜய் மீது தனக்கு எந்த கோபமும் இல்லை என்று அவரது முன்னாள் மனைவியும் நடிகையுமான அமலாபால் கூறியுள்ளார். விஜய்யை விட்டுப் பிரிந்த பிறகு படங்களில் நடிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் அமலா. இதுவரை விஜய் மீது அவர் குற்றச்சாட்டு எதுவும் கூறவில்லை. இந்நிலையில், மீண்டும் இயக்குநர் விஜய்யுடன் சேர்ந்து வாழ வாய்ப்பு உள்ளதா என்று அமலாபாலிடம் கேட்கப்பட்டது. அதற்கு, அடுத்த 2 ஆண்டுகளுக்கு சினிமாவில் நடிப்பதைத் தவிர தனக்கு வேறு நினைப்பு இல்லை என்றார் அவர்.
"விஜய்யும் நானும் மீண்டும் சேர்ந்து வாழ்வோமா என்று தெரியவில்லை. வாழ்வில் எதுவுமே நிலையானது இல்லை. எனவே, இதை எல்லாம் கணிக்க முடியாது. நாம் ஒன்று நினைத்தால் வேறு ஒன்று நடக்கிறது. "நானும் விஜய்யும் வாழ்வில் மற்றொரு விதத்தில் சந்தித்திருந்தால் மகிழ்ச்சியுடன் ஒன்றாக வாழ்ந்திருப்போம். இப்போது அவரும் நானும் வேறு வேறு நிலையில் இருக்கிறோம். அழகான இருவர் தவறான கதையில் சந்தித்ததுபோல் எங்கள் வாழ்க்கை ஆகிவிட்டது. எனக்கு விஜய் மீது எந்த கோபமும் கிடையாது. இன்னும் எனக்கு பிடித்தமானவர் அவர்தான்," என்று அமலா பால் தெரிவித்துள்ளார்.