உயிருக்குப் போராடிய இளையர்; காணொளி எடுத்த பொதுமக்கள்

பெங்களூர்: கர்நாடகாவில் பேருந்து விபத்தில் சிக்கி பதின்ம வயது இளையர் ஒருவர் சாலையில் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். உதவி கேட்டு உயிருக்குப் போராடி அழுத அந்த இளையருக்கு மக்கள் எவரும் உதவி செய்ய முன்வரவில்லை. இதற்கு மாறாக அவரவர்களின் கைப்பேசியில் புகைப்படம் எடுப்ப திலும் காணொளி எடுப்பதிலுமே குறியாக இருந்தனர். குறித்த நேரத்திற்குள் இளையரை தூக்கிச் சென்று மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்திருந் தால் அவரது உயிரைக் காப்பாற்றி இருக்கலாம் என்று அவரது குடும் பத்தினர் துக்கத்துடன் கூறியுள்ளனர். கிட்டத்தட்ட 25 நிமிடங்களாக அன்வர் அலி என்ற அந்த இளை யருக்கு எந்த ஒரு உதவியும் வழங்கப்படவில்லை. ரத்த வெள்ளத்தில் கிடந்தபடி அவர் உதவி கேட்டு அழுது கெஞ்சுவதை காணொளி ஒன்று காட்டுகிறது. ஒரு ஆடவர் மட்டும் அன்வருக்கு தண்ணீர் கொடுக்கிறார். இறுதியில் அந்த 18 வயது இளையரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று சிகிச்சை அளித்தபோது அவர் உயிரிழந்துவிட்டார்.

மருத்துவமனையில் உயிரிழந்த அன்வர் அலி. "மருத்துவ மனையில் அன்வ ருக்கு 7 பாட்டில் ரத்தம் செலுத்தினோம். 35 நிமிடத்திற்கு முன்னதாக மருத்துவ மனைக்கு கொண்டு வந்திருந்தால் அன்வர் அலியைக் காப்பாற்றி இருப் போம்," என்றனர் மருத்துவர்கள். படம்: யூ ட்யூப்பில் இருந்து எடுக்கப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!