பாட்னா: பீகாரில் காரணம் தெரியாமல் குழந்தைகள் உயிரிழப்பதற்கு லைச்சி பழங்களை அவர்கள் சாப்பிடுவதும் காரணமாக இருக்கலாம் என புதிய ஆய்வில் கண்டறியப் பட்டுள்ளது. நோய்வாய்ப்பட்ட குழந்தைகளில் பெரும்பாலா னோர் அண்மையில் லைச்சி பழத்தைச் சாப்பிட்டு இருந்த னர். அத்துடன் கடந்த 24 மணி நேரத்திற்குள் ஆறு முறைக்கும் மேலாக இந்தப் பழத்தோட்டத்துக்கு அவர்கள் சென்று வந்திருப்பதும் அமெரிக்கா, இந்திய விஞ்ஞானிகள் அடங்கிய குழுவினர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
மருத்துவ பத்திரிக்கையான 'தி லான்செட்டில்' வெளி யான புதிய ஆய்வின்படி, பழுக்காத லைச்சி பழங்களை வெறும் வயிற்றில் உண்டு அது விஷமாக மாறியதே உயிரிழப்பிற்கான காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1995ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஒரு மர்மமான காய்ச்சல் பீகாரில் உள்ள முஸாபர்பூர் நகரில் பரவி வருகிறது. இதன் தொடர்பில் அதிக அளவிலான குழந்தைகள் காய்ச்சல், வலிப்பு நோய் ஏற்பட்டு தொடர்ந்து நினைவிழப்புக்கும் சென்று விடுகின்றனர். கடந்த 2014ஆம் ஆண்டில் இந்த காய்ச்சலால் 390 குழந்தைகள் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 122 பேர் உயிரிழந்தனர் என்று சிஎன்என் அறிக்கை தெரிவிக்கிறது.