லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத் தில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த கட்டடம் இடிந்து விழுந்ததில் ஏழு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயங் களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன் னும் அதிகமானோர் கட்டட இடி பாடுகளில் சிக்கிக் கொண்டிருக் கலாம் என அஞ்சப்படுகிறது. கடந்த 12 மணி நேரத்திற்குள் ஒரு மூன்று வயது சிறுமியும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. கட்டடத்திற்கு வலுவான அடித்தளம் இல்லாததே விபத்து ஏற்பட்டதற்கு காரணம் என முதற் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரின் ஜாஜ்மாவ் பகுதியில் உள்ள மசூதி அருகே கடந்த ஓர் ஆண்டாக ஆறு மாடி குடியிருப்புக் கட்டடம் கட்டப்பட்டு வந்தது. இந்தக் கட்டுமானப் பணியில் சுமார் 40க்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், புதனன்று கட்டடம் கட்டும் பணி நடந்து கொண்டிருக்கும்போது யாரும் எதிர்பாராத வகையில் திடீரென கட்டடம் சரிந்து விழுந்தது. இந்த விபத்தால் பல தொழிலாளர்கள் கட்டட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். விபத்து நடந்த இடத்திற்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இடிந்து விழுந்த கட்டடத்தின் இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கிக்கொண்டு இருக்கக் கூடும் என்று அஞ்சப்படுவதால் அவர்களைத் தேடிக் கண்டு பிடித்து மீட்கும் முயற்சி யில் மீட்புப் படையினரும் போலிசாரும் ஈடுபட்டுள்ளனர். படம்: ஊடகம்