துரைமுருகன்: முதல்வரை ஆதரிக்க திமுக தயார்

சென்னை: தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமது பதவி யில் ஐந்து ஆண்டுகள் நீடிக்க வேண்டும் என சட்டமன்ற திமுக துணைத் தலைவர் துரை முருகன் கூறி இருக்கிறார். சட்டமன்றத்தில் நேற்று முன் தினம் பேசிய அவர், தேவைப் படும் பட்சத்தில் முதல்வருக்கு திமுக ஆதரவு தரத் தயார் என்றும் கூறியதால் பரபரப்பு நிலவுகிறது. சட்டமன்றப் பொதுக் கணக்குக் குழுத் தலைவர் பதவி திமுகவுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்பது அக்கட்சி யின் எதிர்பார்ப்பாக இருந்தது. இதை வலியுறுத்தி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சபாநாயகர் தனபாலுக்குக் கடித மும் எழுதியிருந்தார்.

இந்நிலையில் பொதுக் கணக்குக் குழுத் தலைவர் பதவி, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் ராமசாமிக்கு வழங்கப் பட்டுள்ளது. இதனால் திமுக தரப்பு கடும் அதிருப்தி அடைந் துள்ளது. இதன் எதிரொலியாக சட்ட மன்றக் குழுக்கள் எதிலும் திமுக உறுப்பினர்கள் பங்கேற்க மாட்டார்கள் எனவும் அக்கட்சித் தலைமை திட்டவட்டமாக அறி வித்துள்ளது. இந்நிலையில் பேரவையில் பேசிய துரைமுருகன் அதிமுக அரசுக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறியுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!