‘ஜல்லிக்கட்டு நாயகன்’: முதல்வருக்குப் புதிய பட்டம்

சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டத் தைத் தமிழக அரசு காவல்துறையைக் கொண்டு முடக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு 'ஜல்லிக்கட்டு நாயகன்' என்று பட்டம் கொடுத்துள்ளார் அதிமுக எம்எல்ஏ தென்னரசு. நேற்று முன்தினம் பேரவையில் பேசிய அவர், முதலில் காலஞ்சென்ற முதல்வர் ஜெயலிதாவையும், அதிமுக பொதுச்செயலர் சசிகலாவையும் புகழ்ந்தார். இதையடுத்து, "ஜல்லிக் கட்டு நாயகன் முதல்வரை வணங்கி பேச்சைத் துவங்குகிறேன்," என்றார். இதைக் கேட்டு முதல்வர் பன்னீர் செல்வமும் அதிமுகவினரும் லேசாக சிரித்தனர்.

இதற்கிடையே, தமிழகத்தில், ஜல்லிக்கட்டு நடத்த, உரிய ஏற்பாடு களைச் செய்து கொடுத்ததற்காக அதிபர், பிரதமர், ஆளுநர் ஆகியோ ருக்கு நன்றி தெரிவித்து அதிமுக பொதுச் செயலர் சசிகலா கடிதம் அனுப்பி உள்ளார். பிரதமருக்கான மற்றொரு கடிதத் தில், தமிழக கிராமப்புற மாணவ, மாணவியர் நலன் கருதி 'நீட்' மருத்துவ நுழைவுத் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் என சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!