ஜிஎஸ்டி தில்லுமுல்லு: இந்தியர் ஐவர் மீது குற்றச்சாட்டு

சட்டவிரோதமான முறையில் மொத்தம் $167,253 ஜிஎஸ்டி வரி தள்ளுபடிகளைக் கோரியதாகக் கூறப்படும் இந்திய நாட்டவர்கள் ஐந்து பேரை சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் கைது செய்தது. இந்த ஆணையமும் சிங்கப்பூர் சுங்கத் துறையும் சென்ற ஆண்டு மே 27ஆம் தேதி கூட்டாக எடுத்த நடவடிக்கையைத் தொடர்ந்து பிப்ரவரி 1ஆம் தேதி புதன்கிழமை இந்த ஐவரும் பிடிபட்டனர். சாங்கி விமான நிலையத்தில் ஜிஎஸ்டி வரியைப் பெற சட்ட விரோதமான முறையில் முயன் றதாகக் கூறப்பட்டதையடுத்து அவர்கள் பிடிபட்டனர்.

ஐவரும் சுற்றுப்பயணிகளைப் போல் நடித்து, உள்ளூர் வாடிக்கை யாளர்களிடம் இருந்து நகை விலைப்பட்டியல்களை வாங்கிய தாகத் தெரிவிக்கப்பட்டது. பிறகு அவற்றையும் தங்கள் பாஸ்போர்ட்டுகளையும் பயன் படுத்தி இந்த வெளிநாட்டினர் மின்னணு சுற்றுப் பயணி தொகை பெறும் திட்டத்தின் கீழ் டிக்கெட் டுகளை பெற்றுக்கொண்டு, சிங்கப் பூரைவிட்டு புறப்பட்டுச் செல்லும் போது அந்த டிக்கெட்டுகளை வைத்து அவர்கள் வரியைத் திரும் பப் பெற கோரிக்கை விடுத்தனர். ஐந்து பேரில் ஒவ்வொருவர் மீதும் நேற்று 200க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!