மலேசியாவில் கடந்தாண்டு 500,000 விபத்துகள்

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் கடந்த ஆண்டு 521,466 சாலை விபத்துகள் நிகழ்ந்ததாகவும் அவற்றில் 7,152 பேர் மாண்டதாகவும் அந்நாட்டின் போக்குவரத்து அமைச்சர் லியோவ் டியோங் லாய் தெரிவித்தார். அதிகமாகி வரும் சாலை விபத்து களால் கடந்த ஆண்டு மட்டும் மலேசி யாவுக்கு 9.21 பில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டதாகவும் நேற்றுக் காலை செய்தியாளர்களிடம் அவர் குறிப்பிட் டார். 2015ஆம் ஆண்டைக் காட்டிலும் கூடுதலாக 581.3 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டதாக மலேசிய சாலைப் பாதுகாப்பு ஆய்வுக்கழகத்தின் விவரங் களின் அடிப்படையில் திரு லியோவ் தெரிவித்தார். மருத்துவச் செலவு, உற்பத்தித்திறன் இழப்பு, இதர வகை செலவுகள் என இழப்பு கணக்கிடப்படுகிறது. அந்த வகையில் சாலை விபத்தில் உயிரி ழக்கும் ஒவ்வொருவரின் சார்பிலும் சராசரியாக 1.2 மில்லியன் ரிங்கிட்டும் கடுமையாகக் காயமடைவோர் சார்பில் 120,000 ரிங்கிட்டும் இழப்பு ஏற்படு வதாக அமைச்சர் தெரிவித்தார்.

பதிவு பெற்ற ஒவ்வொரு 10,000 வாகனங்களுக்கும் 2.59 பேர் என்னும் சராசரிக் கணக்கில் கடந்தாண்டில் மரணம் நிகழ்ந்துள்ளது. இது அதற்கு முந்திய ஆண்டில் 2.55 பேராக இருந் தது. இதனை அடுத்த மூன்றாண் டுக்குள் 2.0 எனக் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக திரு லியோவ் கூறினார். தொழிற்சாலை களில் மட்டுமல்லாது சாலைகளிலும் பாதுகாப்பு கலா சாரத்தை மலேசியா கொண்டிருத்தல் அவசியம் என்றார் அவர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!