அதிபர் டிரம்ப்பின் ஆணைக்கு எதிராக மேலும் ஓர் அடி

லாஸ் ஏஞ்சலிஸ்: அமெரிக்காவுக்குள் நுழைய சில வெளிநாட்டினருக்குத் தடை விதித்து வெளியிட்ட அதிபர் டோனல்ட் டிரம்பின் செயலாக்க ஆணைக்கு எதிராக மற்றோர் அடி விழுந்துள்ளது. அமெரிக்க வட்டார நீதிமன்றத்தின் நீதிபதியான ஆண்ட்ரு பிரிட்டோ கடந்த வாரம் அதிபர் டிரம்ப் பிறப்பித்த செய லாக்க ஆணைக்கு எதிராக தற்காலிகத் தடுப்பாணையை பிறப்பித்துள்ளார். அதிபர் டிரம்ப் மூன்று மாதங் களுக்குத் தடை விதித்த ஏழு முஸ்லிம் நாடுகளைச் சார்ந்தோர் செல்லுபடி யாகக் கூடிய குடிநுழைவு விசா வைத் திருக்கும்பட்சத்தில் அவர்களை அமெ ரிக்காவுக்குள் நுழைய அனுமதிக்கு மாறு அரசாங்கத்தை அந்த ஆணை கேட்டுக் கொண்டுள்ளது.

ஏமனில் பிறந்த 28 பேரின் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசா ரணையின்போது தடையாணை பிறப் பித்த வேளையில் கடும் சொற்களை நீதிபதி பயன்படுத்தியதாக ஊடகங்கள் குறிப்பிட்டன. அந்த 28 பேரில் ஏமனில் இருக்கும் அமெரிக்கக் குடிமக்களின் குடும்ப உறுப்பினர்களும் அடங்குவர். அமெரிக் காவுக்கு வர அந்தக் குடும்ப உறுப் பினர்களுக்குக் குடிநுழைவு விசாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக வழக்கில் கூறப் பட்டது. அதிபர் 120 நாள் தடை விதித்த ஏழு நாடுகளில் ஏமனும் அடங்கும். இதற்கிடையே, அமெரிக்காவின் புதிய வெளியுறவு அமைச்சராக ரெக்ஸ் டில்லர்சன், 64, பதவி ஏற்றுக்கொண் டுள்ளார்.

டெக்சாஸ் மாநிலத்தைப் பூர்வீக மாகக்கொண்ட அவர் எக்ஸான் மோபில் நிறுவனத்தின் தலைவராகவும் அதன் தலைமைச் செயல் அதிகாரியுமாகப் பணியாற்றியுள்ளார். செனட் சபையில் டில்லர்சனுக்கு ஆதரவாக 56 வாக்குகளும் எதிராக 43 வாக்குகளும் பதிவாயின.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!