சென்னை: தமிழகத்தில் மருத்துவ நுழைவுத் தேர்வை விலக்க சட்ட மசோதா நிறைவேற்றிய முதல்வர் ஓபி.எஸ். பன்னீர்செல்வத்திற்கு தமிழகக் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மத்திய அரசின் வரவு செலவுத் திட்டம் ஏமாற்றம் அளிப்பதாகக் கூறியுள்ளார். தமிழகத்தில் 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைக்கப்படும் என்று ஏற்கெனவே அறிவித்ததை மத்திய அரசு நிறைவேற்றவில்லை.
வறட்சி நிவாரண நிதி வழங்குவதில் மத்திய அரசு பாராமுகமாக உள்ளது. சர்க்கரை மானியத்தை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் ஏழை மக்கள் பாதிக்கப்படுவர். மண்ணெண்ணெய்க்கு மாதந்தோறும் 10 காசு விலை உயர்த்துவதையும் பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும். தமிழக அரசின் 'நீட்' தேர்வை அகற்றும் சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு துணை நிற்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.