நீதிமன்ற உத்தரவை மதிக்காத ஆட்சியர்களுக்குச் சிறை

மேலூர்: உயர் நீதிமன்ற உத்த- ர வை மதிக்காத மதுரை மாவட்ட ஆட்சியருக்கும் மேலூர் வட்டாட்சி யருக் கும் 6 வாரம் உரிமையியல் சிறைத் தண்டனை அளித்தது மேலூர் நீதிமன்றம். மதுரை மேலூர் அருகே கொட்- டாம் பட்டியைச் சேர்ந்த அய்யாத்- துரை ராவுத்தரின் மகன்கள் உசேன் முகமது, ஜவகர் அலி. இவர்களுக்கு வழங்கப்பட்ட சொத்துகளின் கிரய ஆவணத்தின் அடிப்படையில் சொத்தை அளந்து உட்பிரிவு செய்து தனிப்பட்டா வழங்க உத்தரவிடக் கோரி கடந்த 2004ஆம் ஆண்டில் மேலூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்- தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்- டது. இதையடுத்து இருவரும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல் முறையீடு செய்தனர். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இரண்டு மாதங்களுக்குள் இருவருடைய நிலத்தை அளந்து தனிப்பட்டா வழங்க உத்தரவிட்டது.

இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்த பின்- ன ரும் இருவருக்கும் தனிப்பட்டா வழங் கப் படவில்லை. இதனால், உயர் நீதிமன்றக் கிளை யின் உத்தரவை, நீதிமன்றத் தீர்ப்பை நிறை வேற்றாத ஆட்சியர், வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி யும் அவர்களின் வாகனங்களை மீட்டுக்கொள்ளக் கோரியும் இருவ ரும் மேலூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத் தில் நிறைவேறுதல் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நேற்று முன்தினம் விசாரித்த நீதிபதி என்.சுரேஷ், மதுரை மாவட்ட ஆட்சியர், மேலூர் வட்டாட்சியர் ஆகியோருக்கு 6 வாரம் உரிமை- யியல் சிறைத் தண்டனை வழங் கியும் இருவரின் அலுவலக வாகனத்தை மீட்கவும் உத்தர விட்டார். "உரிமையியல் நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மேல்முறை- யீடு செய்யப்படும்," என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்- டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!