6 லட்சம் பேரிடம் ரூ.3,700 கோடி மோசடி செய்த மூவர் கைது

நொய்டா: இணையத்தளம் மூலம் வரும் 'லிங்கை' கிளிக் செய்தால் பணம் தருவதாகக் கூறி 6 லட்சம் பேரிடம் சுமார் ரூ.3,700 கோடி மோசடி செய்த பொறியாளர் உள்ளிட்ட மூவரை காவல்துறையினர் கைது செய்தனர். உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டாவில் அப்ளேஸ் இன்போ சொல்யூசன்ஸ் என்ற தனியார் நிறுவனத்தைத் துவக்கிய அனுபவ் மிட்டல் என்ற பி.டெக் பட்டதாரி, இணையத்தளம் ஒன்றைத் துவக்கி, அதில் வரும் லிங்கைக் கிளிக் செய்தால் ஒவ்வொரு முறையும் ரூ.5 கிடைக்கும் என கூறினார். அதைக் கேட்டு சுமார் 6 லட்சம் பேர் இணைந்து ஏமாந்தனர். இதற்காக அவர்கள் ரூ. 5,000 முதல் ரூ.50,000 வரை பணம் செலுத்தியுள்ளனர். இணையம் மூலம் அவர்களது கைபேசிக்கு அனுப்பப்பட்ட லிங்கை கிளிக் செய்தபோது பணம் செலுத்தியவர்களின் ஃபேஸ்புக், டுவிட்டர் பக்கத்திற்கு சென்றதே தவிர பணம் எதுவும் கிடைக்கவில்லை.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!