சந்திரன் மீதான விசாரணை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைப்பு

உற்பத்தித்திறன் மற்றும் புத்தாக்க உதவித் திட்டத்தின் கீழ் $1.1 மில்லியன் மதிப்புள்ள தொகையைப் பணமாகவும் போனசாகவும் சட்டத்திற்குப் புறம்பான முறையில் பெற 49 நபர்களுக்கு உதவியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட எஸ்.சந்திரன், நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் மாயாஜால வித்தைகள் செய்வதில் புகழ்பெற்ற 35 வயது சந்திரன் மீது மொத்தம் 58 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. நேற்று அவர் தமது உறவினர்களுடன் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். 'பேரடைஸ் கன்சல்டன்சி' என்ற ஆலோசனை நிறு வனத்தை நடத்தி வரும் சந்திரன் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஆறுவார கால அவகாசம் தேவை என அவரைப் பிரதிநிதிக்கும் வழக்கறிஞர் திரு டி.எம்.சின்னதுரை அரசு நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டார். அதன்படி அடுத்த மாதம் 17ஆம் தேதிக்கு இந்த வழக்கை ஒத்திவைத்த நீதிபதி, சந்திரனின் $200,000 பிணையும் அதுவரை நீடிக்க அனுமதி அளித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!