மானபங்கம்: சவூதி அரேபிய தூதரக அதிகாரிக்கு சிறை, பிரம்படி

இளம் பயிற்சி ஊழியப் பெண்ணை இருமுறை மானபங்கம் செய்த குற்றத்திற்காக சவூதி அரேபியத் தூதரக அதிகாரிக்கு நேற்று நீதி மன்றத்தில் 26 மாதம், ஒரு வாரம் சிறைத் தண்டனையும் 4 பிரம்படி களும் விதிக்கப்பட்டன. பெய்ஜிங்கில் உள்ள சவூதி தூதரகத்தில் பணிபுரியும் பண்டார் யாஹ்யா ஏ.அல்ஸஹ்ரானி, 39, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி விடுமுறையில் தமது குடும் பத்துடன் சிங்கப்பூர் வந்திருந்த போது செந்தோசாத் தீவில் மான பங்கக் குற்றச்செயல்களில் ஈடு பட்டதாக நீதிமன்றத்தில் குறிப் பிடப்பட்டது. எட்டு நாட்கள் நடைபெற்ற விசாரணைக்குப் பின்னர் அவர் குற்றவாளி என்று நேற்று முன் தினம் அறிவிக்கப்பட்டது. தாம் தங்கியிருந்த ஹோட்டலில் பயிற்சி ஊழியராகப் பணிபுரிந்த 20 வயதுப் பெண்ணின் கழுத் திலும் முகத்திலும் முத்தமிட்டதாக வும் பின்னர் கட்டிப்பிடித்த வேளை யில் அந்தப் பெண்ணின் மார்பகங் களைக் கசக்கியதாகவும் குற்றச் சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

ஹோட்டலின் குளியலறையில் அச்சம்பவம் நிகழ்ந்தது. பின்னர், அதே பெண்ணை இரண்டாவது முறையும் அதே வகையில் மானபங்கம் செய்ததுடன் தம்மைத் தொடுமாறு பலவந்தப் படுத்தியதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூருக்கு விடுமுறையைக் கழிக்க வந்தபோது குற்றச்செயல் களில் ஈடுபட்ட ஏ.அல்ஸஹ்ரானி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!