ஒவ்வொரு நாளும் போதை புகைத்ததை ஒப்புக்கொண்டார்

சிங்கப்பூரின் பழம்பெரும் நிறுவன மான மெட்ரோ ஹோல்டிங்ஸைத் தோற்றுவித்தவரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக நீதி மன்றத்தால் விசாரிக்கப்பட்டு வரு கிறார். ஓங் ஜென், 41, எனப்படும் அவர் மெட்ரோ நிறுவனர் ஓங் ஜோ கிம்மின் பேரப்பிள்ளை ஆவார். இவரது தந்தை இதே நிறுவனத் தின் குழும நிர்வாக இயக்குநரான ஜோபீ ஓங். ஓங் ஜென்னுக்கு எதிரான எட்டு போதைப்பொருள் குற்றச் சாட்டுகளில் இரண்டு தற்போது விசாரிக்கப்பட்டு வருகின்றன. அதற்காக தமது வழக்கறிஞருடன் அவர் நீதிமன்றம் வந்திருந்தார்.

ஓங் மீது முதன்முதலில் கடந்த 2014ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி குற்றம் சுமத்தப்பட்டது. முகமது இஸ்மாயில் அப்துல் மஜித் என்பவரோடு சேர்ந்து, கட்டுப் படுத்தப்பட்ட போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக ஓங் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் ஒன்று தெரிவிக்கிறது. 'மைக்' என்று அவரை ஓங் அழைத்து வந்தார்.2017-02-04 06:30:00 +0800

ஓங் ஜென். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!