$25 மில்லியன் செலவில் பழமைப் பாதுகாப்பு

தஞ்சோங் பகாரில் உள்ள 'ரெட் டாட் டிராஃபிக்' சிவப்பு நிறக் கட்டடம் விரைவில் அதன் நிறத்தை இழக்கவிருக்கிறது. எண் 28, மேக்ஸ்வேல் ரோட்டில் அமைந்துள்ள இந்தப் பழமைப் பாதுகாப்புக் கட்டடம் 1928ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. அதை இப்போது தன் வசப் படுத்திக் கொண்டுள்ள சட்ட அமைச்சு, வரும் மே மாதத்தில் அதன் நிறத்தை முன்பு இருந்த தைப் போல வெள்ளை நிறத்துக்கு மாற்றவிருக்கிறது. 'ரெட் டாட் டிராஃபிக்' கட்டடத் தில் தற்போதுள்ள 'ரெட் டாட்' வடிவமைப்பு அரும்பொருளகத் துடன் இதர வாடகைதாரர்களும் உள்ளனர். 2005ஆம் ஆண்டில் மீண்டும் திறக்கப்பட்ட இந்தக் கட்டடத்துக்கு வெளிர் சிவப்பு நிற சாயம் பூசப்பட் டது. கட்டடத்தின் நிர்வாகியான 'தி டிராஃபிக்' அமைப்பின் குத் தகை காலம் வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் தேதியன்று முடிவடை கிறது. அதன் பிறகு இந்தக் கட்டடத் தின் தோற்றத்தை மாற்றும் பொறுப்பை ஏற்றிருக்கும் பழமைப்பாதுகாப்பு நிபுணர் திரு ஹோ வெங் ஹின், "வெள்ளை நிறம் அந்தக் கட்டடத்தை முன்னைய சிறப்புகளை நினைவுக்குக் கொண்டு வரும்," என்றார்.

வெளிர் சிவப்பு நிறத்தில் உள்ள இந்த 'ரெட் டாட் டிராஃபிக்' கட்டடம் வரும் மே மாதத்தில் அதன் முன்னைய வெள்ளை நிறத்துக்கு மாற இருக்கிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!