வில்லனாக மீண்டும் களமிறங்கும் பிரசன்னா

பிரசன்னா 'அஞ்சாதே' படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அந்தப் படத்தில் அவருடைய நடிப்பு பேசப்பட்டது. தற்பொழுது அவருக்கு எந்தப் படமும் இல்லாத நிலையில் மீண்டும் வில்லனாகவே நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். நாகார்ஜூனா நடிப்பில் 2013ல் வெளிவந்த 'பாய்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்த பிரசன்னா நான்கு வருட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் 'ஜவான்' என்ற தெலுங்குப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இயக்குநர் பிவிஎஸ் ரவி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் சாய் தரண் தேஜா கதாநாயகனாகவும் மெஹரீன் நாயகியாகவும் நடிக்கின்றனர். அண்மையில் நடைபெற்ற இப்பட பூசையில் கலந்துகொண்ட ஜூனியர் என்.டி.ஆர் படப்பிடிப்பைத் துவங்கி வைத்தார்.

இந்நிலையில் இவர்களின் 2 வயது மகன் விஹான் பள்ளிக்குச் செல்லத் தொடங்கிவிட்டதால் சினேகா இரு படங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டார். கோலிவுட்டில் விஷால் தொடங்கி விஷ்ணு வரை பல நடிகர்கள் சொந்த நிறுவனம் தொடங்கி படங்கள் தயாரித்து அதில் நடித்தும் வருகின்றனர். அதுபோல் தானும் தயாரிப்பாளர் ஆகவேண்டும் என்று பிரசன்னாவுக்கு ஆசை பிறந்துள்ளது. தனது விருப்பத்தை மனைவி சினேகாவிடம் தெரிவித்தார். நடிப்பு ஒன்றே போதும், படம் தயாரித்து நஷ்டப்படவேண்டாம். சொந்தப் படம் எடுக்கிறேன் என்று இறங்கியவர்கள் படும்பாடு குறித்து ஒல்லி நடிகர் கொடுத்த அறிவுரையால் சினேகா தயாரிப்பு வேலை எல்லாம் வேண்டாம் என்று எச்சரித்திருக்கிறார். அதனால் கணவன் மனைவி இடையே மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!