பெய்ஜிங்: அதிபர் டோனல்ட் டிரம்ப் முன்மொழிந்துள்ள சீனாவுக்கான அமெரிக்கத் தூதரான டெர்ரி பிரான்ஸ் டாட், இரு தரப்பிலும் நன்மை பயக்கும் வகையில் வர்த்தக உறவை மேம்படுத்தப் போவதாகக் கூறியுள்ளார். ஐயோவா ஆளுநரான அவர் இரு நாடுகளுக்கு இடையிலான வேறுபாடு களைக் களையப்போவ தாகவும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் சீனா வின் முதலீடுகளுக்கு ஏராள மான வாய்ப்புகள் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
டெர்ரி பிரான்ஸ்டாட். படம்: ஏஎஃப்பி