கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள அமெரிக் கத் தூதரகத்துக்கு முன்பு சில எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்க அதிபர் டிரம்ப், சில இஸ்லாமிய நாடுகளுக்கு எதிராக விதித்துள்ள பயணத்தடைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் முழக்கமிட்டனர். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல் கட்சி களைச் சேரா அமைப்புகளும் பங் கேற்றன. ஆர்ப்பாட்டத்தின் முடி வில் பிரதிநிதிகள், அமெரிக்கத் தூதரிடம் ஆட்சேப மனு ஒன்றை அளித்தனர்.
ஏழு இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த குடிமக்களும் அகதிகளும் அமெரிக்காவில் நுழைய அதிபர் டிரம்ப் அண்மையில் தடை உத்தர வைப் பிறப்பித்திருந்தார். ஈராக், ஈரான், லிபியா, சிரியா, ஏமன், சூடான், சோமாலியா ஆகியவை அந்த ஏழு நாடுகள். ஆனால் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் தடையால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டிய லில் மலேசியா இடம்பெறவில்லை என்று நேற்று அமெரிக்கத் தூதர கம் தெரிவித்தது. ஜனவரி 27ல் டிரம்ப் பிறப்பித்த உத்தரவு மலேசியாவுக்கு எதி ரானது அல்ல என்றும் நேற்று வெளியிட்ட அறிக்கையில் அது கூறியது.
அமெரிக்கத் தூதரகம் முன்பு கூடிய மலேசியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம்: த ஸ்டார்