சென்னை: அதிமுகவை முன்பை விட உறுதியாய்க் கட்டமைக்கப் போவதாக எம்ஜிஆரின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவில் சூளு ரைத்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா அதற்கான செயலில் இறங்கி இருக்கிறார். அதிமுகவின் புதிய அமைப்புச் செயலாளர்களாக கே.ஏ.செங் கோட் டையன், சைதை துரைசாமி, கோகுல இந்திரா, கருப்பசாமி பாண்டியன், சோமசுந்தரம், வரகூர் அருணாசலம், நரசிம்மன், நிறை குளத்தான், அன்பழகன் அண்ணா மலை, உமாதேவன், புத்திசந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக மீனவர் பிரிவு செயலராக அமைச்சர் ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர் பதவியைப் பெற்றுள்ளார். இதற்கிடையே, இந்த நட வடிக்கை கட்சியில் தமக்கு எதி ராகச் செயல்பட்டுவந்ததாகக் கூறப்பட்ட பலருக்கும் முக்கியமான கட்சிப் பதவிகளைக் கொடுத்து அவர்களைத் தனக்கு ஆதரவாக திசை திருப்ப சசிகலா அமல் படுத்தும் வியூகம் என்று அரசியல் கவனிப்பாளர்கள் கருதுகிறார் கள். அதிமுகவின் அசைக்க முடியாத தலைவியாக இருந்துவந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியின் ஆக அனைத்து அதி காரங்களையும் சசிகலா கைப்பற்றி னார்.
கட்சியின் பொதுச் செய லாளர் பதவிக்குப் போட்டியின்றி அவர் தேர்ந்து எடுக்கப்பட்டார். அப்போது அவருக்கு கட்சி யினர் சிலர் ஆதரவு தரவில்லை என்பது தெரியவந்தது. கட்சியின் ஏக அதிகாரங் களுடன் கூடிய பதவியில் அமர்ந்த தும் சசிகலா, எம்ஜிஆரின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவையொட்டி தெண்டர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திடீர் மறைவால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை அரசி யல் எதிரிகள் பயன்படுத்திக் கொள்ள எக்காரணம் கொண்டும் அனுமதித்துவிடக் கூடாது என்று கடிதத்தில் சசிகலா தொண்டர் களைக் கேட்டுக்கொண்டார்.