போகன் படத்திற்காக மது குடித்தாராம் ஹன்சிகா

ஹன்சிகா நடித்து அண்மையில் வெளிவந்திருக்கும் படம் 'போகன்'. இந்தப் படத்தில் அரவிந்த்சாமி, ஜெயம் ரவி நாயகர்களாக நடித்திருந்தார்கள். இப்படம் வெற்றி அடைந்ததை நினைத்து மகிழ்ச்சிக் கடலில் மிதக்கிறார் ஹன்சிகா மோத்வானி. இந்தப் படத்தில் உடல் இளைத்து மிகவும் அழகாகக் காணப்படுகிறார். படத்தில் நடித்தது பற்றி ஹன்சிகா கூறுகையில், "போகன் படத்தில் நடித்தது மறக்கமுடியாத ஒன்று. மகிழ்ச்சியான அனுபவங்கள் நிறைய இருக்கின்றன. முதல் முறையாக இந்தப் படத்திற்காக மது குடித்தேன். குடிக்கும் காட்சி மிகவும் நீளமாக இருந்தது. அந்தக் காட்சியை மட்டும் பத்து நாட்கள் படம் பிடித்தார்கள்.

"என் வாழ்க்கையில் செய்யாத ஒன்றை நான் செய்திருக்கிறேன். ஜெயம் ரவியுடன் நடித்த 3வது படம் இது. எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர் ஜெயம் ரவி. அவருடன் நடிப்பதற்கு எனக்கு எந்தப் பிரச்சினையும் வந்தது இல்லை. இந்திப் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் தமிழ், தெலுங்கில் நடிப்பதையே விரும்புகிறேன். இங்குதான் எனக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள்," என்றார். 'போகன்' படம் பிரபுதேவா இயக்கத்தில் வெளி வந்திருக்கும் படம். இவருடைய இயக்கத்தில் 'எங்கேயும் காதல்' படத்தில் நடித்திருந்தார் ஹன்சிகா. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது, 'எங்கேயும் காதல்' படத்தின் ஹன்சிகாவிற்கும் 'போகன்' படத்தின் ஹன்சிகாவிற்கும் இடையே என்ன வித்தியாசம் என்று கேட்டதற்கு, "அப்போது ஹன்சிகா குண்டாக இருந்தார். இப்போது உடல் இளைத்து ஒல்லியாக இருக்கிறார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!