பிரதமர் நம்பிக்கை: அமெரிக்க ஒத்துழைப்பு, உதவி தொடரும்

அமெரிக்காவுடனான சிங்கப்பூரின் பலதுறை ஒத்துழைப்பும் ஆசியா வில் அமைதிக்கும் நிலைபாட்டுக் கும் அமெரிக்கா ஆற்றும் பங்கும் தொடரும் என்று பிரதமர் லீ சியன் லூங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். டெக் கீயில் நேற்று நடந்த சீனப் புத்தாண்டு விருந்து நிகழ்ச் சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய திரு லீ, அமெரிக்காவில் இடம் பெறக்கூடிய நிலவரங்களைக் கவனமாக நாம் கவனித்து வர வேண்டி இருக்கிறது என்றார். அதேவேளையில் சீனா போன்ற மற்ற நாடுகளுடன் நல்ல உறவை சிங்கப்பூர் தொடர்ந்து கட்டிக்காத்து வரும் என்றும் திரு லீ தெரிவித்தார்.

சீனாவுடன் சிங்கப்பூர் நல்லுறவு கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், இந்த மாத முடிவில் சீனாவின் பெய்ஜிங் நகரில் இரு தரப்பு ஒத்துழைப்புக்கான கூட்டு மன்றக் கூட்டம் நடக்கவிருப் பதைக் குறிப்பிட்டார். இப்போதைய சூழலில் வாய்ப்பு களையும் சவால்களையும் சிங்கப் பூர் எதிர்நோக்குவதாகக் கூறிய திரு லீ, தொடர்ந்து முன்னேற நாம் ஐக்கியமாக இருக்கவேண் டும் என்றார். வெளிநாட்டு உறவு களை நிர்வகிக்கும் வேளையில் சிங்கப்பூருக்கு எவை முக்கியம் என்பதைப் புரிந்துகொண்டு புதிய பாதைகளை ஒற்றுமையாக நாம் காணவேண்டும் என்றார் திரு லீ. டெக் கீ, அங் மோ கியோவில் இடம்பெறக்கூடிய மேம்பாட்டு பணி களைச் சுட்டிக்காட்டிய திரு லீ, சிங்கப்பூரை பொறுத்தவரையில் அது உள்நாட்டில் சீராக வளர்ச்சி அடைந்து வருகிறது என்றும் உலக அளவில் நிச்சயமில்லாத நிலையை சிங்கப்பூர் எதிர்நோக்கு வதாகவும் தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!