பதின்ம வயது வலைப்பதிவாளர் ஏமஸ் யீயை மனிதாபிமான அடிப்படையில் தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்க இயலவில்லை என்று அவரின் சட்ட நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. அந்த இளைஞர் இப்போது அமெரிக்காவில் அரசியல் அடைக் கலம் நாடுகிறார். ஏமஸ் தொடர்பான இறுதி விசாரணை வரும் மார்ச் 7ஆம் தேதி நடக்கவிருக்கிறது. அது வரை அவர் அமெரிக்காவில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு இருப்பார். மனிதாபிமான அடிப்படையில் அந்த வலைப்பதிவாளரை விடு விக்க அமெரிக்க குடிநுழைவுத் துறை அதிகாரிகள் மறுத்துவிட்ட னர். அமெரிக்காவில் அரசியல் அடைக்கலம் நாடும் முயற்சியில் ஏமஸ் யீயை பிரதிநிதிக்கும் கிராஸ்மேன் லா என்ற சட்ட நிறு வனம் இந்த விவரங்களைத் தெரி வித்துள்ளது. ஏமஸ் டிசம்பர் 16ல் அமெரிக்கா சென்றதுமுதலே தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
சமய உணர்வுகளைப் புண் படுத்தியதற்காக சிங்கப்பூரில் அவருக்கு ஆறு வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அதற்கும் மேலாக மார்ச் 7 வரை 8-0 நாட்களுக்கு அவர் அமெரிக்க தடுப்புக்காவலில் வைக்கப்படுவார் என்று அந்நிறு வனம் தெரிவித்தது.