ஆக்டிவ்எஸ்ஜி என்ற விளை யாட்டிற்கான தேசிய இயக்கம் இப்போது இளையர்களுடன் சேர்ந்து செயல்திட்டங்களை அரங் கேற்றுகிறது. சமூகத்தில் இன்னும் அதிகமான மக்களை விளை யாட்டுகளில் ஈடுபடுத்தி அவர் களைச் சுறுசுறுப்புடன், உடல் நலத்துடன் திகழச் செய்வதே இதன் நோக்கம். இந்த இயக்கம் உயர்கல்வி நிலையங்களுடன் பங்காளித்துவ உறவை ஏற்படுத்திக்கொண்டு செயல்திட்டங்களை அரங்கேற்ற திட்டமிடுகிறது. இதில் முதலாவ தாக இந்த இயக்கம் தொழில்நுட்ப கல்விக்கழகத்தின் மத்திய கல் லூரி மாணவர்களுடன் சேர்ந்து ஆறு செயல்திட்டங்களை அமல் படுத்துகிறது.
மூத்த குடிமக்கள், குடும்பத்தி னர் ஆகியோரை இந்தச் செயல் திட்டங்கள் நோக்கமாகக் கொண் டிருக்கின்றன. இவற்றில் ஒரு திட் டம் நேற்று சனிக்கிழமை அரங் கேறியது. ஆக்டிவ்எஸ்ஜி பிடோக் விளை யாட்டு மையத்தில் 200க்கும் அதிக முதியோர்கள் திரைப்படங் களில் வரும் கதாநாயகர்களைப் போல உடையும் தலையில் தொப்பி யும் அணிந்துகொண்டு சும்பா நடனத்தில் கலந்துகொண்டனர். பெருநடையிலும் ஈடுபட்ட அந்த முதியோர்கள், தட்டு எறிதல் போன்ற விளையாட்டுகளிலும் ஈடு பட்டனர். ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லீ யி ஷியான் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
ஆக்டிவ்எஸ்ஜி பீடோக் விளையாட்டு மையத்தில் நேற்று நடந்த ஆக்டிவ்எஸ்ஜி/தொழில்நுட்ப கல்விக்கழக மத்திய கல்லூரி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதியவர்கள் தங்கள் உடல்எடை, உடல்பருமன், ரத்தத்தில் கொழுப்பு அளவு ஆகியவற்றைப் பரிசோதித்து தெரிந்துகொண்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்